பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லதா?.. மக்களே உண்மையை தெரிஞ்சிக்கோங்க.!



fruits-to-eat-without-skin-is-no-minerals

நமது வாழ்நாட்களில் நாம் பலவிதமான பழங்களை பார்த்திருப்போம். அதில் சில பழவகைகளை சாப்பிட்டு இருப்போம். இதில் தோலோடு சாப்பிடும் பழம், தோல் உரித்து சாப்பிடும் பழம் என பல வகைகள் இருக்கின்றன. 

அத்துடன் பழங்களை பொதுவாக தோலோடு சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள். திராட்சை, மாம்பழம், சப்போட்டா, கொய்யா, சாத்துக்குடி, ஆப்பிள் போன்ற பழங்களில் தோல் இருக்கும். நார்ச்சத்து காரணமாக அதனை தோலோடு சாப்பிட வேண்டும் அல்லது தோலோடு அரைத்து சாராக எடுத்து குடிக்கலாம். 

ஆப்பிள் பழத்தின் தோலில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இவை இதய நோயாளிகளுக்கு நல்லது. ஆப்பிளை தோலோடு சாப்பிட்டாலே நன்மைகள் கிடைக்கும். அதேபோல கொய்யாப்பழத்தில் சருமத்தை காக்கும் வைட்டமின்கள் இருக்கின்றன. 

ரத்த கொழுப்பையும் அவை கரைக்க உதவி செய்கிறது. வாழைப்பழத் தோலில் கால்சியம் உள்ளது. இது உடலுக்கு பல நன்மையை தருகிறது. தக்காளியை தோலோடு சாப்பிட்டால் அதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம் சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது.