#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கையளவு திராட்சையில் கடலளவு நன்மையா.!? இது தெரியாமலா இவ்வளவு நாள் சாப்பிட்டோம்.!
பொதுவாக திராட்சையில் மூன்று வகை நிறம் உள்ளன. அவை கருப்பு, சிவப்பு, பச்சை போன்றவை ஆகும். இந்த மூன்று வகை திராட்சைகளிலும் சத்துக்கள் இருந்தாலும் கருப்பு நிற திராட்சையில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. சுவையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் இந்த கருப்பு திராட்சை பற்றி கீழே பார்க்கலாம்.
கருப்பு திராட்சை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது, அதிக அளவு வைட்டமின் சி கொண்டுள்ளது. இரத்த அழுத்தத்தை குறைத்து, மூளை செயல்பாடு, சரும ஆரோக்கியம், கண் பாதுகாப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் எலும்புகளை வலுப்படுத்தி எலும்புப்புரை அபாயத்தைக் குறைக்கிறது.
கருப்பு திராட்சையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. மேலும் இந்த திராட்சையில் உள்ள லுடீன் மற்றும் zeaxanthin இரண்டும் சேர்ந்து வயது தொடர்பான மாகுலர் சிதைவு, கண் புரை மற்றும் கண் நோய்களின் அபாயத்தைக் குறைத்து மூளைச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
கருப்பு திராட்சை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கோளாறுகளுக்கு தீர்வாக அமையும். இதில் உள்ள ரெஸ்வெராட்ரால் மூளை செயல்பாடு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். வைட்டமின் சி முடி வளர்ச்சியை அதிகரிக்கும். கருப்பு திராட்சையில் உள்ள பாலிஃபீனால்கள் முதுமையில் தாக்கும் அல்சைமர் நோயிலிருந்து பாதுகாக்கிறது.
செல்லுலோஸ், சர்க்கரை மற்றும் ஆர்கானிக் அமிலம் கருப்பு நிற திராட்சையில் அதிகம் இருப்பதால், அவை நம் வயிற்றை ஒரு நல்ல அமைப்பில் வைத்து, அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து கழிவுகளை எளிதாக வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. திராட்சையை சாப்பிடும் போது வறட்டு இருமல் சரியாகும். உடம்பில் இரத்த உற்பத்தியை தூண்டும். மேலும், கருப்பு நிற திராட்சையை ஜூஸ் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி, ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.