தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Health benefits of coconut oil

தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது. எனவே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் காரணமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும்.

Coconut oil

 அதேபோல் இதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதில், உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தின் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி உதிர்களை தடுத்து வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும அழற்சியை குறைக்க உதவுகிறது.

Coconut oil

தேங்காய் எண்ணெயில் உள்ள புரதம் தலைமுடி உதிர்களை தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடியின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் தலைமுடி வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும்.