தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உங்களுக்கு அடிக்கடி கோபம் வருமா?.. டென்ஷனாகி மற்றவர்களிடம் கத்துவீர்களா?..! அப்போ இது உங்களுக்குத்தான்..!
பொதுவாகவே ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுவார்கள். தற்போதைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை உபயோகித்து அனைவரும் டென்ஷனாகி மற்றவர்களிடம் கோபமடைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோபம் என்பது கண் மட்டுமின்றி மூளையையே மறைத்துவிடும். கோபத்தை கட்டுப்படுத்துவதே உண்மையான வீரம் என்பது சான்றோர் வாக்கு. ஆனால் அதனை கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று என்று அனைவரும் கூறிவருகின்றனர். தற்போது கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காணலாம்.
கோபத்தை குறைக்கும் வழிமுறைகள் :
★வார்த்தைக்கு வார்த்தை பேசுவதை தவிர்க்கவேண்டும்.
★அமைதியாக இருக்க வேண்டும். பெருமூச்சுவிட்டு மற்றவர்கள் கூறுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
★மெல்லிசை பாடல்களை கேட்க வேண்டும்.
★தினமும் காலை 10 நிமிடமாவது யோகா, தியானம் செய்ய வேண்டும்.
★மனதை அமைதிபடுத்த புத்தகங்களை படிக்க வேண்டும்.
இம்முறைகளை பின்பற்றினாலே கோபத்தை விரைவில் தவிர்த்துவிடலாம். கோபத்தை தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், சில நாட்களிலேயே கோபத்தை கட்டுப்படுத்தி பின் தவிர்க்கலாம்.