மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு.. காலாவதியான கேஸ் சிலிண்டரை எப்படி கண்டுபிடிப்பது?.. இன்றே தெரிஞ்சிக்கோங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
காலாவதியான கியாஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
வீட்டில் அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும் பொருட்களில் முக்கியமானதாக இருப்பது சமையல் கியாஸ். காலாவதியான சிலிண்டர் என்றால் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் கேஸ் சிலிண்டருக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொடுக்கப்படுகிறது.
அதனை மாற்றாமல் கேஸ் நிறுவனங்கள் மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருவதால் சில நேரங்களில் கியாஸ் கசிவு ஏற்பட்டு பேராபத்தும் ஏற்படும். இதனை கண்டறிவது மிகவும் சுலபமானது. சிலிண்டிற்கு மேல் இருக்கும் மூன்று கம்பிகளில் ஒரு கம்பியின் உட்புறத்தில் கேஸ் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் நம்பரிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இதில் ஏ.பி.சி.டி என்ற ஆங்கில எழுத்து இருக்கும். அதன்படி 'ஏ' என்பது மார்ச் முதல் காலாண்டு, 'பி' என்பது ஜூன் இரண்டாம் காலாண்டு, 'சி' என்பது செப்டம்பர் மூன்றாம் காலாண்டு, 'டி' என்பது டிசம்பர் ஆகும். ஆங்கிலத்தில் ஏ16 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அது மார்ச் 2016 உடன் நிறைவடைகிறது என்பதன் அர்த்தம்.