குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?



How to fix constipation for child


குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை அடிக்கடி வரும். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறு.

ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதேபோல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம்.

பொதுவாக மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, உணவு சமநிலையின்மை, நார்ச்சத்து குறைபாடு, உடல் நீர் வற்றுதல், உணவில் மாற்றம், தாய்ப்பால் இல்லாமல் மாட்டுப்பால் கொடுப்பது என  பல காரணங்கள் இருக்கின்றன.

constipation

குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் சுடு நீர் கொடுக்கவேண்டும். மேலும் குழந்தைகளின் இடுப்பு நன்கு அசையும்படியான விளையாட்டுக்களை ஓடி விளையாட பழகி கொடுக்க வேண்டும்.

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். இவ்வாறு கடைபிடித்தால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும்.