#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இவ்வளவு ஈஸியா?? இரண்டே நிமிடத்தில் மஞ்சள் நிற பற்களை போக்க வேண்டுமா? அப்போ இத செய்யுங்க!
நமது அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது நமது பற்களில் தெரியும் மஞ்சள் கரை. தான் மற்றவர்முன்பு அழகாக தெரியவேண்டும் என நினைப்பது ஆண், பெண் என இருவருக்குமே தோன்றுவது வழக்கம். தங்களின் நம்பிக்கையை உடைத்து, மற்றவர்களின் முன்பு சிரித்து பேசுவதற்க்கே சற்று யோசிக்கவேண்டியதாக உள்ளது.
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக அதிகம் புகை பிடித்தல், மது அருந்துதல், காப்பி குடித்தல், மேலும் அதிக சர்க்கரை இதுபோன்றவை நமது பற்களின் ஆரோக்கியத்தை கெடுத்து நமது பற்களை மஞ்சள் நிறமாக மாற்றுகிறது.
சரி அவ்வாறு மஞ்சள் நிறமாக மாறிய பற்களை ரசாயனம் எதுவும் இல்லாமல் வேலை நிறமாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் தேங்காய் எண்ணையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இது நமது முகம், தலை முடி மட்டும் இன்றி நமது உடல் முழுவதும் ஆரோக்கியம் தரும் பல விஷயங்களை நமக்கு தருகின்றன.
எப்படி தேங்காய் என்னை மூலம் வெள்ளை பற்களை பெறுவது? தேங்காய் எண்ணையுடன் சிறிது சமையல் சோடாவை கலந்து பயன் படுத்துவதன் மூலம் இரண்டு நிமிடங்களில் வெள்ளை பற்களை பெற முடியும்.
செய்முறை:
தேங்காய் எண்ணெய்யையும் சமையல் சேடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். உங்கள் பற்பசைகளிற்கு பதிலாக இதனைப் பயன்படுத்துவதனால் சிறந்த பலனைப் பெற முடியும். இதனை உங்கள் குளியலறையில் அல்லது குளிரூட்டியில் வைத்திருக்க முடியும்.
தேங்காய் எண்ணெய் வாயின் சுகாதாரத்தைப் பேணுவதுடன் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும் போதும் தேங்காய் எண்ணெய்யை தடவினால் இலகுவான தீர்வைப் பெற முடியும்.