"இதை சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் சளி இருமல் சரியாகும்!"
பருவநிலை மாற்றத்தால் பலரும் இப்போது சளி மற்றும் இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நமது உடல் மிகவும் பலவீனமடைந்து விடும். ஆரம்பத்திலேயே சளியை குணப்படுத்திவிட வேண்டும்.
இல்லையென்றால் சளி அதிகமாகி, அது காய்ச்சலில் கொண்டு போய்விடும். வீட்டிலேயே கஷாயம் செய்து குடித்தால் சளியை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விடலாம். கஷாயம் செய்யும் முறையை இங்கு பார்ப்போம். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதில் 2 கையளவு கற்பூரவள்ளி இலை, 1 கையளவு துளசியை சேர்த்து, அடுத்து 1தேக்கரண்டி சித்தரத்தை பொடி, அரை தேக்கரண்டி திப்பிலி பொடி, 1தேக்கரண்டி மிளகுப் பொடி, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஓமம் சேர்த்து கொதிக்க விடவும்.
அரை லிட்டர் தண்ணீர் 1/4 லிட்டராக வற்றும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். பின்னர் அதை வடிகட்டி அதனுடன் காயச்சிய பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருக வேண்டும். இதை ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் குடித்து வந்தால் சளி இருமல் பாதிப்பு சரியாகும்.