சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இந்தியாவை பெருமை அடைய வைத்த பெண் "ஆனந்திபாய் ஜோஷி" இவர் யாரென்று தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் உலக மகளிர்தினமாக கொண்டாடப்படுகிறது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொன்ன காலம் மாறி ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணைத்து துறைகளிலும் முன்னுரிமை பெற்றுள்ளனனர். படிப்பு, தொழில், விளையாட்டு, சமூகம் என அணைத்து துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடத்தை பெற்றுள்ளனனர்.
நாட்டிற்காக பெருமை சேர்த்த பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அனந்திபாய் ஜோஷி. யார் இந்த அனந்திபாய் ஜோஷி?
பெண்கள் என்றால் அடிமைகளாக பார்த்துவந்த காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் அணைத்து துறைகளிலும் சாதிக்கமுடியும் என்பதை நிரூபிக்க மருத்துவ துறையில் மருத்துவம் பயின்று சேவை செய்த முதல் பெண் மருத்துவர்தான் இந்த ஆனந்தி பாய் ஜோஷி. மேலும் ஆங்கில மருத்துவத்தை பயின்ற முதல் பெண் மருத்துவர்.
அதுமட்டும் இல்லாமல் அமெரிக்காவிற்கு பயணம் செய்த முதல் பெண்ணும் இந்த ஆனந்தி பாய் ஜோஷிதான். மகளிர் தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் நினைவில்கொள்ளவேண்டிய முக்கியமான பெண்களில் இவரும் ஒருவர்.