காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பூரான் கடித்தால் ஆபத்தா ? உயிரே போய்விடுமா?.. உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்; அலட்சியம் வேண்டாம்..!
வயல்வெளிகள் சார்ந்த இடங்களில் நாம் இருக்கும் போது பூச்சி தாக்குதலுக்கு கட்டாயம் உள்ளாக வேண்டியிருக்கும். அவ்வப்போது பூரான், தேள் போன்றவை நம்மை கடித்து விடும்.
இதில் பூரான் மனிதர்களை கடித்தால் சிறிய அளவிலான விஷத்தன்மை என்றாலும், பூரானில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சலங்கை பூரான் அதிக விஷத்தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது.
இந்த பூரான் கடித்த இடம் சிவந்த போதல், எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு உடல் அளவில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதனால் பூரான் கடித்துவிட்டால் மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதேபோல சுயமாக மாத்திரைகள் போன்றவை எடுத்துக்கொண்டு அலட்சியமாகவும் இருக்கக் கூடாது.