மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோல் வியாதிகளை குணப்படுத்தும் கடலைப்பருப்பு தனியா துவையல்..! வீட்டிலேயே செய்வது எப்படி?.!
கடலைப்பருப்பை அதிகம் சாப்பிடுவதன் மூலமாக தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் எளிதில் குணமாகும். மேலும், இதில் திசுக்கள், எலும்புகள், தசைகள் உருவாக்கத்திற்கு முக்கியமான புரதசெல் அதிகமாக உள்ளது.
பொதுவாக கடலைப்பருப்பில் பலவகையான உணவுகள் இருந்தாலும், அதில் கடலைப்பருப்பு தனியா துவையல் தனிசுவை தான். இட்லி, தோசை, சாதம் என எதில் கலந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். இதனை எவ்வாறு செய்யலாம் என தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் -6
பூண்டுப்பல் -6
புளி - தேவைக்கேற்ப
தக்காளி - 2
தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் தனியாவை வெறும் கடாயில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
★பின் அதனை தனியாக எடுத்து வைத்துவிட்டு, சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வதக்கி ஆற வைக்க வேண்டும்.
★அடுத்து வறுத்த தனியாவை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
★பின் அதனுடன் முன்பே வதக்கி வைத்த பொருட்களை சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
★அவ்வளவுதான் சூப்பரான கடலைப்பருப்பு தனியா துவையல் நிமிடங்களில் தயாராகிவிடும். இந்த துவையல் தோசை இட்லி மற்றும் ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.