மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலும்புக்கு வலிமையளிக்கும் கடலைப்பருப்பு பாயாசம்... வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!
பல்வேறு சத்துக்கள் நிறைந்த கடலைப்பருப்பு பாயாசம் எவ்வாறு சமைப்பது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.
கடலைப்பருப்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை அளிக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
துருவிய வெல்லம் - 1½ கப்
துருவிய தேங்காய் - 5 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலப்பொடி - ½ தேக்கரண்டி
உடைத்த முந்திரி - 2
செய்முறை :
★முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடலைப் பருப்பை லேசாக வறுக்க வேண்டும்.
★பின் வறுத்த கடலை பருப்பை குக்கரில் போட்டு நீரூற்றி வேக வைக்க வேண்டும். வெந்த பருப்பில் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
★அடுத்து பருப்பு மற்றும் வெல்லம் ஒன்றாக சேர்ந்ததும், ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் போன்றவற்றை கொதிக்கும் பாயாசத்தில் சேர்க்க வேண்டும்.
★இறுதியாக ஏலப்பொடி தூவி இறக்கினால் சூப்பரான கடலை பருப்பு பாயாசம் நிமிடங்களில் தயாராகிவிடும்.