மீந்து போன சாதத்தில் சூப்பரான லேயர் பரோட்டா.. இப்படி செய்து அசத்துங்கள்.!



layer parotta using old rice in tamil

வீட்டில் சமைத்த சாதம் மிச்சமானால் அதை பலரும் பயன்படுத்தாமல் குப்பையில் போட்டு விடுகின்றனர். ஆனால், இந்த மீந்து போன சாதத்தை வைத்து, சுவையான லேயர் பரோட்டா செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குஷியாக சாப்பிடுவார்கள் என்பது தெரியுமா.? எப்படி செய்வதென பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

தண்ணீர் அரை  கப் 

சாதம் ஒரு கப் 

உப்பு தேவையான அளவு 

மைதா ரெண்டு கப் 

எண்ணெய் ஒரு ஸ்பூன்.

layer parotta

செய்முறை :

மிக்ஸி ஜாரில் சாதத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். அதில் 2 கப் மைதா மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சற்று நீரை அதிகமாக ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி மூடி வைத்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 

அதன் பின் திறந்து கைகளில் எண்ணெயை தடவிக் கொண்டு இசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் சில நிமிடங்களுக்கு நன்றாக பிசைய வேண்டும். அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பரோட்டா தேய்கின்ற இடத்தில் நன்றாக எண்ணெய்யை தடவி ஒரு உருண்டையை எடுத்து வைத்து நன்கு மெலிசாக தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதில் சிறிதளவு மைதா மாவை தூவி கைகளால் தடவி பிசைந்த மாவை எடுத்து அப்படியே சுருட்டி சுருட்டி வைக்க வேண்டும். இதுபோல மீதமுள்ள அனைத்து உருண்டைகளையும் தயார் செய்து வைத்துக் கொண்டு, மீண்டும் அதை எடுத்து தேய்த்துக் கொள்ள வேண்டும். 

பின் தோசை கல்லில் அனைத்தையும் போட்டு எண்ணெய் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்து, சூடாக பரோட்டா இருக்கும்போது கைகளால் அடித்தால் சூப்பரான லேயர் பரோட்டா ரெடி.