35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
உஷார் மக்களே! இந்த மொபைல் ஆப்கள் மூலம் நமது தகவல்கள் திருடப்படுகிறதாம்
கூகிள் பிலே ஸ்டோரில் இருக்கும் பல்வேறு செயலிகளைக் கொண்டு தான் ஹேக்கர்கள் நமது மொபைல் போனில் உள்ள தகவல்களை திருடுகின்றனர் என்பதை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். அவற்றில் இருந்து எப்படி நம்மை காத்துகொள்வது எனபதை தெரிந்துகொள்ளுங்கள்.
வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் மிக பாதுகாப்பாக உள்ளதாக எண்ணினால் அது மிக தவறு. பாதுகாப்பிற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் பயன்படுத்தும் end-to-end encryption தொழில்நுட்பத்தையும் ஊடுருவி நமது தகவல்களை திருடும் வல்லமை கொண்டவர்களாக பல ஹேக்கர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி நமது தகவல்களை திருட முடியும் என எண்ணுகிறீர்களா? நிச்சயம் முடியும்.
நமது வாட்ஸ்-ஆப் தகவல்கள் மட்டுமல்லாமல் நமது மொபைல் போனில் சேகரித்து வைத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் முதலியவற்றையும் அவர்களால் திருட முடியும். இதற்கென்றே அவர்கள் பல போலி ஆப்புகளை உருவாக்கி கூகுளின் பிலே ஸ்டோரில் உளவ விட்டுள்ளனர் என Trend Micro என்ற தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் 'ANDROIDOS_MOBSTSPY' என்ற மாலவேர் வைரஸை அந்த ஆப்புகளில் பயன்படுத்தியுள்ளதாகவும், அத்தகைய ஆப்புகளை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்தால் அந்த மால்வேர் நமது மொபைலை ஸ்கேன் செய்ய துவங்கிவிடுமாம். இதன் மூலம் நமது வாட்ஸ்-ஆப், பேஸ்புக் மற்றும் மொபைல் போனில் சேகரித்து வைத்துள்ள அனைத்து தகவல்களையும் அவர்களால் பெற முடியுமாம்.
இதுவரை இதைப்போன்ற மாலவேர் வைரஸ்களை உள்ளடக்கிய 6 ஆப்புகளை கூகிள் பிலே ஸ்டோரில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த ஆப்புகளை இதுவரை 100,000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆப்புகளால் 200 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறதாம்.
இந்த மாலவேர் Flappy Birr Dog, FlashLight, Win7imulator, Win7Launcher, HZPermis Pro Arabe and Flappy Bird ஆகிய 6 ஆப்புகளில் தான் அடங்கியுள்ளனவாம். இந்த ஆப்புகள் அனைத்தும் தற்போது கூகிள் பிலே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாம். ஆனால் இவைகளை ஏற்கனவே யாரேனும் அவர்களது மொபைலில் பதிவிறக்கம் செய்திருந்தால் அதனை உடனே நீக்கிவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ, நம்மால் மொபைல் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் தேவையில்லாத ஆப்புகளையாவது பதிவிறக்கம் செய்யாமல் நமது தகவல்களை பாதுகாக்க முயற்சிப்போம்.