காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
"உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா?! அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை வெளியேற்றி விடவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது நாளடைவில் மலச்சிக்கல் பிரச்சனையாக மாறிவிடும். மலத்தை அடக்கி வைப்பது, போதுமான அளவு தண்ணீர் அருந்தாதது, முறையற்ற தூக்கம் ஆகியவை மலச்சிக்கல் ஏற்பாடக் காரணமாகின்றன.
இந்த தீராத மலச்சிக்கலை சரிசெய்ய ஒரு எளிய வழி உள்ளது. நம் பாரம்பரிய சிறு தானிய உணவான ராகியை பயன்படுத்தி செய்யும் உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால், மலச்சிக்கல் பாதிப்பு தீர்வதோடு, உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
முதல் நாள் காலையில் 100கி அளவு ராகியை 3, 4 முறை கழுவி பின் 8 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின்னர் இரவு அதை வடிகட்டி, அதனை முளை கட்ட விடவேண்டும். பின்னர் அடுத்த நாள் காலை முளை கட்டிய ராகியை மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.
முன்னதாக அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, பின்னர் அரைத்துவைத்துள்ள ராகியை வடிகட்டி, இந்த கொதிக்க விட்ட நாட்டுச் சர்க்கரை தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி குடிக்கலாம். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கிவிடும்.