உங்கள் உடம்பில் வைட்டமின் பி12 குறைவாக உள்ளதா.? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!



Remedies for Vitamin b12 deficiency

ஊட்டசத்தான உணவுகள்

பொதுவாக நாம் உண்ணும் உணவுகள் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் தர வேண்டும். அந்த அளவிற்கு சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை விட ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும், பொறித்த உணவுகளையுமே மக்கள் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.

Vitamin B12

வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்

எனவே இத்தகைய உணவுகளில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் பலவிதமான நோய் பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. குறிப்பாக வைட்டமின் பி12 சத்து நம் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, நியூரான் குறைபாடு, நரம்பு செல்கள் பாதிப்பு, உடலில் எல்லாப் பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்வது போன்றவை தடைப்படும்.

இதையும் படிங்க: சாப்பிட்டவுடன் இந்த விஷயங்களை கண்டிப்பாக மறந்தும் கூட செய்யாதீங்க.! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.!?

Vitamin B12

உணவின் மூலம் கிடைக்கும் வைட்டமின் B12 சத்து

வைட்டமின் பி12 சத்து உணவின் மூலமாக மட்டுமே கிடைக்கும் என்பதால் ஊட்ட சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
1. மாட்டு இறைச்சி கல்லீரலில் வைட்டமின் பி12 சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் இதை வாரத்திற்கு ஒருமுறை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
2. சைவ பிரியர்களாக இருந்தால் தாவர பால், தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. இதை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
3. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளதால் இதை குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதன் மூலம் உடல் பலப்படும்.
4. பால் பொருட்களில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளதால் பால் பொருட்கள் ஆனால் தயிர், மோர், சீஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
5. நண்டு, மத்தி மீன்கள், சால்மன் போன்ற வகை மீன்களில் வைட்டமின் பி12 சத்து அதிகமாக உள்ளது. மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நோயற்ற வாழ்வை வாழலாம்.

இதையும் படிங்க: இதை தெரிஞ்சுக்கோங்க.! தயிரில் வெள்ளரிக்காய் விதை சேர்த்து சாப்பிட்டு வந்தால்.!?