"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
வீட்டில் பணம் தங்காததற்கு நீங்கள் செய்யும் சிறு தவறுகள் கூட காரணமாக இருக்கலாம்... கவனமாக இருங்கள்..!
பணம் சம்பாதிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு, நாம் உழைத்து சாம்பாதித்த பணத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது? அதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி சில கூற்றுகளை நாம் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு, இல்லாமல் நாம் செய்யும் சிறு தவறினால் வீட்டில் பணபுழக்கம் இல்லாமலே போய்விடும்.
பணத்தை தக்கவைத்துக் கொள்வதில் நாம் செய்யும் தவறுகள் :
நீங்கள் பணம் வைக்கும் அலமாரிக்கு முன்னால் எந்த கதவும் இருக்க கூடாது. குறிப்பாக கழிவறைக்கு முன்னால் பணம் வைக்கும் அலமாரி இருக்கவே கூடாது. அவ்வாறு, இருந்தால் வாஸ்து சாஸ்திரத்தின் படி பணம் தங்காமல் போய்விடும்.
இதையும் படிங்க: மழைக்கு நடுவே குட்டியுடன் அடைக்கலம் தேடிய நாய்; வைரலாகும் மனம் நெகிழவைக்கும் வீடியோ.!
மேலும், பணம் இருக்கும் அலமாரியில் மருந்துகள் வைக்கக் கூடாது. இவ்வாறு மருந்துகள் வைத்தால் வாஸ்து சாஸ்திரத்தின் படி பணம் தங்காமல் போக அதிக வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், நிலத் தகராறு மற்றும் நீதிமன்ற வழக்கு ஆவணங்களை பணம் வைக்கும் அலமாரியில் வைக்கக் கூடாது. ஏனெனில், இது ஒரு எதிர்மறையான ஆவணங்கள் என்பதால் பணம் இருக்கும் அலமாரியில் சேர்த்து வைத்தால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக பணம் வைக்கும் அலமாரியை பல வண்ணங்கள் கொண்டதாக வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால், அவ்வாறு அலமாரி வாங்கும்போது கருப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு, பதிலாக தங்கம், வெளிர் சாம்பல் நிறம் கொண்ட அலமாரியை வாங்குவது சிறப்பு.
இதையும் படிங்க: டீ, காபி விரும்பிகளே.. காலை எழுந்தவுடன் இதை மட்டும் மறக்காம செஞ்சிடுங்க..!