வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. அடடா இது தெரியாம போச்சே.!



The benefits of eating peanuts.

நம்மில் அனைவரும் வேர்க்கடலை விரும்பி உண்பவர்களாகவே இருப்பர். ஆனால் வேர்க்கடலை அதிகம் எடுத்துக்கொண்டால் கொழுப்பு சத்து அதிகமாகி நெஞ்சுவலி ஏற்படும் என்ற மித்தும் பரவலாக காணப்படுகிறது. உண்மையை சொல்லப் போனால் வேர்க்கடலை சாப்பிடுவதினால் கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகளை அதிகரிக்கச் செய்யும்.

மேலும் இந்த வேர்க்கடலைகளில் 25% புரோட்டின் இருப்பதனால் புரதத்தின் ஆதாரமாக வேர்க்கடலை விளங்குகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வேர்க்கடலைகளில் கார்போஹைட்ரேட்டுகளும் மிகவும் குறைந்த அளவே உள்ளன. இதனால் உடல் எடையை பேலன்ஸ் செய்வதில் வேர்க்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

benifits

நாம் தினமும் வேர்க்கடலை உட்கொண்டால் ரத்த நாளங்களை பாதுகாத்து இதய ஆரோக்கியத்தை செம்மைப்படுத்துகிறது. மேலும் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் இவை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் வேர்க்கடலைகளில் வைட்டமின் C மற்றும் E இருப்பதால் சருமத்தை மிகவும் பொலிவாக வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் காயங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுகிறது.

இந்த வேர்க்கடலை உண்பதால் பெண்களுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன. மாங்கனிசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் என ஏகப்பட்ட சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. மேலும் கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வரலாம். அது மட்டுமல்லாமல் பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துவதில் வேர்க்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்கு வேர்க்கடலைகளை அதிகம் சாப்பிட கொடுப்பதனால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களை தாக்கி அளிக்கும் வலிமை இந்த வேர்க்கடலைகளுக்கு உள்ளது. குறிப்பாக வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்தோ அல்லது உப்பு சேர்த்தோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.