திருமணமான பெண்கள் அதிகம் விரும்புவது இதைத்தானாம்! வெளியான ஆய்வு முடிவுகள்!



what-girls-expecting-after-marriage-in-tamil

திருமண உறவு என்றாலே எதிர்பார்ப்புகள் நிறைந்த ஒரு உறவு என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். திருமணம் ஆன பெண்கள் தங்கள் துணையிடம் அதிகம் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றி சமீபத்திய ஆய்வு ஓன்று வெளியாகியுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் பெரும்பாலான பெண்கள் தங்களது துணை தனக்கு சம உரிமை தர வேண்டும் என்றுதான் அதிகம் விரும்புகிறார்களாம்.

ஒருசில பெண்கள், திருமணம் முடிந்த பிறகு வீட்டு வேளைகளில் துணையின் பங்கு சரிசமமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். குறிப்பாக வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பில் ஆண்களின் சம பங்கு வேண்டும் என்று எதிர்பார்கின்றனராம்.

relationship

குறிப்பிட்ட சதவீதத்தினர், தங்களது கணவர் தங்களது பெற்றோரை அவரது பெற்றோர்போல் என்ன வேண்டும் என்றும், அவர்களும் மதிப்பு தரவேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்களாம்.

அதேபோல, திருமணத்திற்கு பிறகு தங்களது மதம் சார்ந்த விஷயங்களையும், தங்களது தனிப்பட்ட விஷயங்களிலும் தங்களது வாழ்க்கைத்துணை தலையிடக்கூடாது எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஷாப்பிங் செய்வது, அலுவலகத்திற்கு அழைத்துச்செல்வது, படம் பார்க்க கூட்டி செல்வது போன்ற விஷயங்களிலும் தங்களது வாழ்க்கைத்துணை ஈடுபட வேண்டும் என்பது திருமணம் ஆன பெண்களின் விருப்பமாம்.