திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புயலால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் 11 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி..!
மாண்டஸ் புயலின் பாதிப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாண்டஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும் இரண்டு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 44 ஆயிரம் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கோவையை தமிழக முதலமைச்சர் புறக்கணிப்பதாக தொடர்ந்து ஒரு சிலர் கூறுகின்றனர். கோவையில் நடந்த இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநகர பகுதிகளில் இருக்கும் சாலைகளை சீரமைக்க ரூ.211 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 26 கோடி விடுவிக்கப்பட்டு அதன் வேலை வேகமாக நடந்து வருகிறது. இரண்டாவது கட்டமாக 138 சாலைகளை சீரமைக்க ரூ.19 கோடியே 84 லட்சத்தை ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். மொத்தத்தில் கோவை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று அவர் கூறினார்.