திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இப்படியும் ஒரு தொண்டர்.. ராகுல் பிரதமரானால் மட்டுமே செருப்பு அணிவேன் - 13 ஆண்டுகளாக வெறும் காலில் நடைபயணம்.!
ராகுல் காந்தி பிரதமரானால் மட்டுமே என் கால்கள் செருப்பை அணியும் என 13 ஆண்டுகளாக வெறும் கால்களில் நடக்கும் தொண்டரின் உண்மை உழைப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆணி வேறாக இருக்கும் தொண்டர்கள், அவர்கள் பற்று வைத்துள்ள தலைவர்களுக்காக தயக்கம் இன்றி களத்தில் இறங்கும் நபர்கள் ஆவார்கள்.
இவர்கள் தங்களின் தலைவர்கள் வெற்றிபெற வேண்டி பல வினோதமான செயல்களை செய்வார்கள். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் ஷர்மா பண்டிட்ஜி என்பவர், செருப்பு அணியாமல் ராகுலின் பாதை யாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அவ்வரிடம் கேட்கையில், "ராகுல் காந்தி பிரதமராகும் வரை நான் கால்களில் செருப்பை அணியமாட்டேன். கடந்த 13 ஆண்டுகளாக நான் செருப்பு அணியாமல் ராகுல் பிரதமராக போராடி வருகிறேன். கடந்த 2011ல் நான் எனது பாத அணிகளை கழற்றினேன். ராகுல் பிரதமராகினால் மீண்டும் அதனை அணிந்துகொள்வேன்" என தெரிவித்தார்.