மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BREAKING : அதிமுகவுக்கு தனது கட்சியுடன் ஆதரவு அளித்த பிரபல நடிகர்.!
2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் கடந்த தேர்தல்களில் ஒரே கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை இரண்டும் தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அதுமட்டுமல்லாமல் இரு கட்சிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த முறை திமுக, அதிமுக மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, தமாக உள்ளிட்டவை பாஜகவின் கூட்டணியில் இந்த முறை இணைந்துள்ளன. இதன் காரணமாக அதிமுகவின் வாக்கு வங்கியானது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவிற்கு எதிர்பாராத அளவில் சமீப காலமாக ஆதரவு ஏற்பட துவங்கியுள்ளது.
நேற்று சேலத்தில் எடப்பாடியை சந்தித்த விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்த நிலையில் தற்போது மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் 16ம் தேதி வரை அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தென் தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் கார்த்திக்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது