மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளிர் தினத்தில் முக்கிய பெண் பிரமுகர்களுடன் கமலின் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!
மகளிர் தினத்தன்று பல முக்கியமான சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் செயலாற்றிய பெண்கள் சிலர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களில் நடிகை கோவை சரளாவும் ஒருவர் ஆவார்.
இன்று மார்ச் - 8, மகளிர் தின விழாவானது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையலுவலகத்தில் நம்மவர் கமலஹாசன் அவர்களின் தலைமையில் துவங்கியது. இந்த விழாவில் திருமதி நசீர் கமீலா வரவேற்புரையும், நடிகை ஸ்ரீப்ரியா சிறப்புரையும் ஆற்றினர்.
இந்த விழாவில் பெர்க்ஸ் ஆச்சாரியா என்கின்ற பள்ளி மற்றும் Perks Sports Academy ன் கரஸ்பாண்டண்ட் டாக்டர் உஷா அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். மேலும் நடிகை கோவை சரளாவும் கட்சியில் இணைந்தார். மாற்றத்தை முன்னெடுத்து நல்ல ஆட்சியினை தலைவர் கமல் அவர்களால் கொடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் கட்சியில் இணைகின்றேன் என்று டாக்டர் உஷா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கமல், "மகளிர் தினத்தன்று பல முக்கியமான சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் செயலாற்றிய பெண்கள் நமது கட்சியில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்களை விட அனைத்திலும் அதிக விழுக்காடு பெறுவதற்கு பெண்கள் உரிமை பெற்றவர்கள். அவர்களின் உரிமை எவ்விதத்திலும் எவராலும் மறுக்கப்படக் கூடாது".
மேலும் வேலைவாய்ப்பு பெருகிட வேண்டும். அரசியல் சௌகரியத்திற்காக மட்டுமே மக்களின் வேலை வாய்ப்பினை தடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் என பேசிய கமல், எனக்கு பிறகு எனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள் என வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் உரையாற்றினார்.