மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#PMMODI: "ஊழல்வாதிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்" - பிரதமர் மோடி உறுதி.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்தில் முடிவடைய இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்குகள் என்ன போட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
பொதுத்தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் 370 இடங்களை கைப்பற்றும் எனவும் அக்கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த இலக்கை அடைவதற்காக பாரதிய ஜனதா கட்சி தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தங்களது அடுத்த ஆட்சியில் ஊழல்வாதிகள் மீது எந்த இரக்கமும் காட்ட மாட்டோம் என தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தங்களது 3-வது ஆட்சி காலத்தில் ஊழல் செய்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் இரும்புக்கரம் கொண்டு கொடுக்கப்படுவார்கள் என மோடி தெரிவித்துள்ளார்.