2ஜி வழக்கில் இனி தாமதிக்கமுடியாது.. அதிரடி உத்தரவு போட்ட டெல்லி ஐகோர்ட்டு.!
ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து அன்றாடம் 2ஜி வழக்கில் அமலாகத்துறை, சிபிஐ மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படும் என டெல்லி ஹைகோர்ட் அறிவித்துள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது 2ஜி 'அலைக்கற்றையை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும்' மத்திய தணிக்கை குழு அறிக்கை கொடுத்ததன் பெயரில் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ டெல்லி ஹை கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செப்டம்பர் மாத இறுதி வரை வழக்கை தள்ளி வைக்க வேண்டுமென சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை டெல்லி ஹைகோர்ட் ஏற்றது. இந்த நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இந்த 2ஜிவழக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் அன்றாடம் விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.