கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த கமல்ஹாசன்.! முதலிடம் யாருக்கு தெரியுமா.?



kamal-third-place-inproperty-value

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கியது. இதனையடுத்து முதலமைச்சர் வேட்பாளர் உட்பட பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து வேட்பாளர்களின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இசக்கி சுப்பையா உள்ளார். 

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அவரது சொத்து மதிப்பு 246 கோடியே 73 லட்சம் ரூபாயாக உள்ளது. அடுத்ததாக சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ எம்.கே.மோகன் 211 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு அவரது சொத்துமதிப்பு 170 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. 

kamal

இதனையடுத்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசனுக்கு 176 கோடி ரூபாய் மதிப்பிலும், அதே கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மகேந்திரனுக்கு 161 கோடி ரூபாய் மதிப்பிலும் சொத்து உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் மூன்றாவது இடத்தில் கமலும், இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளரும், முதலிடத்தில் அதிமுக வேட்பாளரும் உள்ளனர்.