ஜி20 மாநாட்டின் அழைப்பிதழ் விவகாரம்! எம்.பி. கனிமொழியின் கூற்று!!



Kanimozhi about the name changed Bharat

ஜி20 உச்சிமாநாட்டின் அழைப்பிதழில் 'பாரதத்தின் ஜனாதிபதி' ('President of Bharat') என்று இருந்தது குறித்து, திமுக எம்பி கனிமொழி கூறுகையில், 'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற பெயரில் அழைப்புகள் வருவதை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை.

அது எப்போதும் 'இந்தியாவின் ஜனாதிபதி' அல்லது இந்தியப் பிரதமராகத்தான் இருக்கும். இப்போது ஏன் இப்படிச் செய்தார்கள்?இதன் பின்னணி என்ன?இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? சமீபத்தில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியிருந்தார். இதை கேட்கும் போது நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் தேசம் முழுவதற்குமான நிகழ்ச்சி நிரலை அமைக்கிறதா? .நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் எதற்காக அழைக்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை? அங்கு நடக்கப்போகும் நிகழ்ச்சி நிரல் என்னவென்று எங்களுக்குத் தெரியாது,  என தெரிவித்துள்ளார்.