மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி தகவல்.! பாதி பேருக்கு மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படுகிறதா.?!
பாதி பேருக்கு மகளிர் உரிமைத் தொகைக்காக வழங்கப்படும் ₹.1000 ரூபாயை நிறுத்துவதற்கான திட்டத்தை திமுக போடுகிறது என்று நடிகை குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் தகுதியுள்ள மகளிர்களுக்கு மட்டும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திமுக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளுக்கு இந்த தொகை ₹.1000 செலுத்தப்படுகிறது.
இந்த தொகை செலுத்தப்பட்டதற்கான மெசேஜ் உடனடியாக இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்து விடுகிறது. தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திட்டம் அமலுக்கு வந்தபோது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும், அரசியல் கட்சிகள் பலவும் இதை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில், இது குறித்து நடிகை குஷ்பு," முதலில் அனைவருக்கும் என்றார்கள் இப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு என்று கூறினார்கள்.
அடுத்ததாக வீடு வீடாக ஆய்வு செய்ய வருகிறார்கள். இது எல்லாமே பாதி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்காமல் இருப்பதற்கான திட்டம்தான்." என்று தெரிவித்து இருக்கிறார்.