மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நம்ப வைத்து கழுத்தறுத்த பாஜக.. ஆதரவாளர்களிடம் புலம்பிய ஓபிஎஸ்?
ஓபிஎஸ் தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கடந்த மார்ச் 3-ம் தேதி உருவாக்கப்பட்டது. இதனையடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளார். இதில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகள் தருவதாக முதலில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாஜக-பாமக உடன் கூட்டணி அமைத்து விட்டதால் ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் எனவும், அந்த தொகுதியில் நீங்களே தனி சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியுள்ளனர். இதனால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு மட்டும் தெரிவித்து விட்டு தேர்தலில் இருந்து விலகி விடலாம் என ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஆனால், தேர்தலில் போட்டியிட்டால் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியும் என்றும் ஒரு தொகுதியாக இருந்தாலும் நாம் போட்டியிட வேண்டும் என்றும் நீங்களே போட்டியிடுங்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை கூறியுள்ளார். இதனையடுத்து தான் ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.