மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாரிசு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.. அசத்தல் பேச்சால் குவிந்த பாராட்டு..!
அடுத்த தலைமுறைக்கான தலைவரை மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். உதயநிதி துணை முதல்வருக்கான பணியை செய்கிறார் என அமைச்சர் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "திராவிட கொள்கைகள் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சென்றடைய வேண்டும். அந்த கொள்கையில் உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். அதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் திராவிட உணர்வை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். இதுவே வாரிசு.
நமது தலைவர் கூறியதை போல ஆம் உதயநிதி வாரிசு தான். அண்ணா, பெரியார், கலைஞரின் கொள்கைக்கு நாங்கள் வாரிசுதான். அடுத்த தலைமுறைக்கான தலைவரை மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வருக்கு இணையான பணிகளை செய்து வருகிறார்.
அவர் எதிர்காலத்தில் என்னவாக வருவார் என நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ள தேவையில்லை. இந்தியாவிலேயே தேர்வு செய்யப்படும் சட்டப்பேரவை உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தான்" என்று பேசினார். அமைச்சரின் பேச்சுக்களின் போது கட்சியினர் தங்களின் பாராட்டுகளை கரகோசமாக வெளிப்படுத்தினர்.