பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
10 விக்கெட்டுகளை வீழ்த்த 10 பவுலர்களை பயன்படுத்திய கோலி; இந்திய அணி மோசமான பந்துவீச்சு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் CAXI அணி முதல் இன்னிங்சில் 544 ரன்கள் எடுத்து வலுவான நிலையை அடைந்தது. 4 நாட்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்த ஆட்டத்தின் முதல் நாள் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. துவக்க ஆட்டக்காரர் ப்ரித்திவ் ஷா, விராட்கோலி உள்பட 5 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியினர் தங்களது சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட் ஜோடிக்கு அந்த அணி 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். சிறப்பாக ஆடிய அந்த அணியின் நீல்சன் சதமடித்தார். துவக்க ஆட்டக்காரர்கள் ஷார்ட் பிரயாண்ட் மற்றும் ஹார்டி ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர்.
சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியினரின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல யுக்திகளை பயன்படுத்தினார். ஆனால் அவருக்கு எதுவும் கைகொடுப்பதாக இல்லை. இந்திய அணியின் சார்பில் சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா, ஹனுமா விஹாரி, கோலி, முரளிவிஜய், பும்ரா, குலதீப் யாதவ் என பத்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார் கோலி.
இறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 544 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சமி 3 விக்கெட்டுகளும், அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது. நான்கு நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் அதிரடியாக ஆடி 129 ரன்களும் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 62 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடனான இந்த போட்டியிலே இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆடியுள்ள நிலையில் வருகிற 6ம் தேதி துவங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் எந்த அளவிற்கு தங்களது திறமையை வெளிப்படுத்த போகிறார்கள் என்பதில் சிறிய அச்சம் ஏற்பட்டுள்ளது.