மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 பந்தில் 4 விக்கெட்.. சுருண்டுபோன இங்கிலாந்து..! வெஸ்ட் இண்டீஸ் ஜேசன் ஹோல்டர் சாதனை..!
வெஸ்டிண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 ஆவது டி 20 போட்டியானது பார்பாடாசில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தன.
அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்களும், பாவெல் 35 ரன்களும் எடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 162 ரன்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சாம் பில்லிங்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் இறுதி நேரத்தில் கடைசி ஓவரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து, 3 - 2 க்கு என்ற செட் கணக்கில், டி 20 தொடரை கைப்பற்றியது.
ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் விளையாடிய ஹோல்டர் 5 விக்கெட்டையும், ஹொசைன் 4 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் டி 20 போட்டித்தொடரில் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரராக ஜேசன் ஹோல்டர் இடம்பெற்றுள்ளார்.