மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் நாட்டையே தோற்கடித்த பென் ஸ்டோக்ஸிற்கு நியூசிலாந்தில் கிடைத்த உயரிய கௌரவம்!
கடந்த வாரம் பரபரப்பாக நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் பிறந்தது நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்னும் இடத்தில் தான். அவரது குடும்பத்தினர் இன்னும் நியூசிலாந்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். அவரது தந்தை ஹெட் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து ரக்பி லீக் அணியில் ஆடியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் 12 வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்தினர் இங்கிலாந்தில் குடியேறினர். ஆனால் தற்போது அவரது பெற்றோர் மட்டும் நியூசிலாந்திற்கு திரும்பி வந்து கிரிஸ்ட்சர்ச்சில் வசித்து வருகின்றனர்.
என்ன தான் நியூசிலாந்தை பென் ஸ்டோக்ஸ் தோற்கடித்திருந்தாலும், தன்னுடைய நாட்டை சேர்ந்தவரின் திறமையை பாராட்டியாக வேண்டும் என்ற நன்மதிப்புடன் நியூசிலாந்து அரசு ஒரு முடிவினை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நியூசிலாந்து நாட்டவர் என்ற விருது அந்நாட்டில் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான சிறந்த நியூசிலாந்து நாட்டவர் என்ற உயரிய விருதுக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் பெயரையும் நியூசிலாந்து அரசு பரிந்துரை செய்துள்ளது. இவருடன் சேர்த்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் உட்பட பலரின் பெயரும் பரித்துரை செய்யப்பட்டுள்ளது.