#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புலம்பி தீர்க்கும் சென்னை அணி ரசிகர்கள்! கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறு விறுப்பாக நடந்துவருகிறது. 39 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியான சென்னை அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை சென்னை அணி எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார்.
162 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது சென்னை அணிக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது. தல தோனியின் நிதானமான ஆட்டம் சென்னை அணியை வெற்றிக்கு அருகில் கொன்று சென்றது.
இறுதி ஓவரில் 6 பந்துக்கு 25 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அதிரடியாக விளையாடிய தோணி உமேஷ் யாதவ் வீசிய பந்தில் மூன்று சிக்ஸ், ஒரு பவுண்டரி, ஒரு டூ டிக் அடித்து சென்னை அணியை ஏறக்குறைய வெற்றி என்ற நிலமைக்கு கொண்டுவந்தார். ஒரு பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் தோணி ரன் அவுட் ஆனது சென்னை ரசிகர்களுக்கு மிகவப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
கடைசி பந்தில் சென்னை வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ணியில் தோனியின் விக்கெட்டால் சென்னை ரசிகர்கள் தற்போது புலம்பி வருகின்றனர்.