#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மோத தயாராகும் தோனி மற்றும் விராட் கோலி. மார்ச் 23 இல் பல பரீட்சை!
இந்த வருட IPL போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவொரு வருடமும் நடைபெற்றுவரும் IPL T20 போட்டி இந்த வருடமும் நடைபெறவுள்ளது. இந்தியாவில் தேர்தல் வர இருப்பதால் போட்டிகள் வெளிநாடுகளில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டிகள் இந்தியவிலையே நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக சூதாட்ட புகாரில் இருந்து மீண்டு கடந்த வருடம் மீண்டும் IPL போட்டியில் இடம் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில் இந்த வருடம் நடைபெறும் போட்டியானது மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.
மேலும் முதல் போட்டியானது சென்னையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் போட்டிக்கான முதல் இரண்டு வாரத்திற்கான நேர பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.