#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
10 ஆண்டுகளுக்கு முன் நடந்தது மீண்டும் நடக்குமா? 2010 ஐபில் இல் நடந்தது என்ன? மீண்டு எழுமா சென்னை அணி?
சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்ததுபோல் இந்த முறையும் நடக்குமா என சென்னை அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
கடந்த மாதம் தொடங்கிய ஐபில் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளநிலையில் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. முதல் நான்கு இடங்களை பெரும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெறும் 4 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. 7 போட்டியில் 5 போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்ததால், சென்னை அணியால் இனி அடுத்த லீக் போட்டிக்கு தகுதிபெற முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை அணி இனிவரும் 7 போட்டிகளில் 6 அல்லது 5 போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதேபோல் சென்னை அணி கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியில் முதல் 7 போட்டியில் 2 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது.
அதனை அடுத்து மீதமிருந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று சென்னை அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து அடுத்த லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதுமட்டும் இல்லாமல், அந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
2010 ஆம் ஆண்டு நடந்ததுபோலவே சென்னை அணி தற்போது 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இனி வரும் போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து வெற்றிபெற்றால் அடுத்த லீக் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.