#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களின் நீண்ட நாள் கனவை இன்று நிறைவேற்றிய சிஎஸ்கே.. வெற்றிப்பயணம் துவங்குமா?
ஐபிஎல் 2020 டி20 தொடரின் 25 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் 5 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளன.
சென்னை அணிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகள் அந்த அணியை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கியது. குறிப்பாக மிடில் ஆர்டரில் பார்மில் இல்லாத கேதர் ஜாதவை அணியில் ஏன் சேர்க்கிறார்கள் என சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த எரிச்சலுடன் இருந்தனர்.
ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியில் முதல்முறையாக கிறிஸ் மோரிஸ் களமிறங்குகிறார்.