சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
பெங்களூரு அணிக்கு எதிராக கோரத்தாண்டவமாடிய தோனி நிகழ்த்திய சில சாதனைகளின் புள்ளிவிவரங்கள்!
2019 ஆவது ஆண்டு ஐபிஎல் தொடரின் 39 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த த்ரில் ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் 1 வித்தியாசத்தில் வென்றது. தோனி கடைசிவரை அவுட்டாகாமல் 84 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சென்னை அணி முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனி முதலில் நிதானமாக ஆட்டத்தை துவங்கினர். பின்னர் தனது வேட்டையை ஆரம்பித்த தோனி அரை சதம் அடித்து கடைசி பந்து வரை தனது அணியின் வெற்றிக்காக போராடினார். கடைசி ஓவரின் முதல் 5 பந்துகளில் 24 ரன்களை எடுத்த தோனி கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முடியாமல் போனதால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் தோனி ஒரு சில சாதனைகளை படைத்துள்ளார்:
உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் தோனி அடித்த சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியில் சென்றது. 111 மீட்டர் தூரம் சென்ற இந்த சிக்ஸர் தான் இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸர் ஆகும். இதற்கு முன்னர் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா 104 மீட்டர் தூரத்தில் சிக்சர் அடித்துள்ளார்.
#Dhoni Always King🔥🔥 pic.twitter.com/U5yI2pGsuu
— Jeeva (@Jeeva86412372) April 21, 2019
இந்த போட்டியில் 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்த தோனி மொத்தம் ஏழு சிக்சர்களை விளாசினார். இதுவரை 203 சிக்சர்களை ஐபிஎல் தொடரில் அளித்துள்ள தோனி 200 சிக்சர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் மற்றும் டிவில்லியர்ஸ் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 4330 ரன்கள் எடுத்துள்ள தோனி கேப்டனாக ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.