மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் கற்றுதந்தது சென்னை அணிதான்! செம ஹேப்பியாக தல தோனி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் சீசன் 13வது தொடர் அடுத்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க உள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், சென்னை சிஎஸ்கே அணி தற்போது தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனை தொடர்ந்து எந்தவித சர்வதேச போட்டிகளிலும் தோனி கலந்துகொள்ளாத நிலையில், கடந்த ஏழு மாதங்களாக தோனி ரசிகர்கள் பெரும் ஏக்கத்தில் இருந்தனர். அதனை போக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தோனி பேட்டி ஒன்றில் கூறுகையில், ஒரு சிறந்த மனிதராக, கிரிக்கெட் வீரராக, வாழ்க்கையில் எத்தகைய இக்கட்டான கடினமான நிலையை எதிர்கொள்வததற்கும் சென்னை அணி கற்றுத்தந்துள்ளது. மேலும் அதன் மூலம் திறமையாக செயல்படும்போது.அடக்கத்துடன் இருப்பது எப்படி என்பதையும் நன்கு தெரிந்து கொண்டேன்.
தல என்றால், சகோதரர் என்று அர்த்தம். சென்னையில் அல்லது தென் மாநிலங்களில் எங்கிருந்தாலும் என்னை பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். தல என்றுதான் அழைப்பார்கள். அவர்கள் அவ்வாறு அழைக்கும் போது அல்லது அளவுகடந்த அன்பையும், பாசத்தையும் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.