திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தீராத பைக் மோகம்.. சிஎஸ்கே ஸ்டைலில் தோனியின் வீட்டை அலங்கரிக்கும் புதிய மோட்டார் பைக்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மோட்டார் பைக் மீது தீராத காதல் உண்டு என்பது அனைவரும் அறிந்த விஷயமே. தோனி மிகவும் விலை உயர்ந்த பைக்குகலான ஹாட்லி டேவிட்சன், ஹவாஷகி நிஞ்ஜா, ஹெல்காட் போன்ற பைக்குகளை வைத்துள்ளார்.
மேலும் தமக்கு பிடித்தமான மற்ற பைக்குகளையும் தன் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து பயன்படுத்தும் விருப்பம் கொண்டவர். இந்த வரிசையில் தோனியை மிகவும் கவர்ந்த பைக் யமஹா RD350. இதுவே தோனி பயன்படுத்திய முதல் பைக்கும் ஆகும்.
தற்போது மீண்டும் யமஹா RD350 பைக் ஒன்றினை வாங்கியுள்ள தோனி அதனை தனக்கு நெருக்கமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிறத்தில் மாற்றம் செய்துள்ளார். மேலும் அந்த பைக்கில் தோனியின் அடையாளமான நம்பர் 7 பொறிக்கப்பட்டுள்ளது.