அவ்வளவு வேகத்திலும் அசையாத ஸ்டம்ப்! கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட டுபிளஸிஸ்



du plessis missed his oppurtunity

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலையே அதிர்ச்சி காத்திருந்தது. பெங்களூரு அணியின் ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் கேட்ச் கொடுத்து வெளியேற அடுத்த பந்திலேயே ரெய்னா க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

IPL 2019

இதனைத் தொடர்ந்து உமேஷ் யாதவ் வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தை சென்னை அணியின் டுபிளஸிஸ் சந்தித்தார். மிகவும் வேகமாக வீசப்பட்ட அந்த பந்து டுபிளஸிஸ் பாட்டில் படாமல் ஆப் ஸ்டம்பில் உரசிக்கொண்டு சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்டம்ப் அசைந்து பைல்ஸ் விழாமல் இருந்ததால் டுபிளஸிஸ் அவுட்டாகாமல் தப்பித்தார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து டுபிளஸிஸ் அவுட் ஆனார்.



தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் அதே ஓவரில் டுபிளஸிஸ் அவுட்டானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.