மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. சூப்பர்! துபாய் பார்ட்டியில் ஹர்திக் பாண்டியாவுடன் மாஸ் ஆட்டம் போட்ட மகேந்திர சிங் தோனி! ரசிகர்களை குஷியாக்கிய வீடியோ.!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் மகேந்திர சிங் தோனி. பல போட்டிகளை கூலாக கையாண்டு வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்றுதந்த பெருமை அவருக்கு உண்டு. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி தற்போது தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு நடந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவிலும் அவர் மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த விழாவில் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான இடையேயான டி20 போட்டியில் வெற்றியை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் இணைந்துள்ளார்.
மேலும் அந்த விழாவில் பிரபல ராப் பாடகர் பாட்ஷாவுடன் இணைந்து பாட்டு பாடுவதும், ஹர்திக் பாண்டியாவுடன் நடனமாடுவது என தோனி செம ஜாலியாக இருந்துள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை மகிழ்ச்சிடைய செய்துள்ளது.
Mahi & hardik seen dancing at a party with their close friends, last night in dubai 🕺🔥#MSDhoni pic.twitter.com/PB5pGPSZsJ
— Chakri Dhoni (@ChakriDhoni17) November 27, 2022