நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
ஒரு ஓவரால் 20% கட்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு ஓவர் தாமதமாக பந்து வீசியதால் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி தொகையிலிருந்து 20 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த ஜூலை 22 ஆம் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்கள் என்ற இலக்கை நெருங்க முயன்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. கடைசி ஓவர் வரை பரபரப்பாக இருந்த இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தவான் குறித்த நேரத்திற்குள் 50 ஓவர்களை வீசவில்லை என நடுவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த நேரத்தை தாண்டி ஒரு ஓவர் வீசியதாக கண்டறியப்பட்டு இந்திய அணியின் போட்டி தொகையிலிருந்து 20 சதவிகிதத்தை அபராதமாக செலுத்த வேண்டுமென ஐசிசி அறிவித்துள்ளது.