#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடர் தோல்வி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் 9 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதன் இறுதிப்போட்டி 2021 ஜூன் மாதம் 10 முதல் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தொடரில் இந்திய அணி முதலில் விளையாடிய 7 போட்டிகளிலுமே வென்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இருப்பினும் 360 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தையே தக்க வைத்துள்ளது. 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 296 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் 7 போட்டிகளில் 3ல் வென்றுள்ள நியூசிலாந்து அணி 180 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.