தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஐபில் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம்? முன்னேறுமா சிஎஸ்கே?
ஐபில் 13 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த சீசனில் இதுவரை 23 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
ஐபில் 2020:
இன்றைய நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகிறது. மற்றொரு போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மிகவும் பரபரப்பாக போட்டி நடந்துவரும் இந்த சீசனில் ஐபில் கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் அணிகளுக்கு இடையேயான போட்டி உச்சத்தை எட்டியுள்ளது.
ஆட்டம்காட்டும் டெல்லி, அசத்தும் மும்பை:
இந்த ஐபில் சீசனில் மிகவும் வலுவாய்ந்த அணியாக டெல்லி மற்றும் மும்பை அணிகள் உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்நிலையில் 10 புள்ளிகளுடன் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், 8 புள்ளிகளுடன் மும்மை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
முன்னேறும் ஹைதராபாத் அணி:
இந்த சீசனில் தொடக்கத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஹைத்ராபாத் அணி, தனது தொடர் வெற்றியால் புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறியுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, 6 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் மூன்றது இடத்தில் உள்ளது.
போட்டிபோடும் கொல்கத்தா மற்றும் பெங்களூரு:
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இரண்டும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளநிலையில் தலா 6 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திலும், பெங்களூரு அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
முன்னேறுமா சென்னை அணி?
தோனி தலைமையிலான சென்னை அணி இந்த ஐபில் சீசனில் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணியுடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெறுமா? புள்ளி பட்டியலில் முன்னேறுமா? என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ராஜஸ்தான் - பஞ்சாப்:
தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும், பஞ்சாப் அணி 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 8 வது இடத்திலும் உள்ளது.