#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#IndVsNz: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. 47.3 ஓவரில் 219 ரன்கள் எடுத்து இந்தியா ஆல்அவுட்.. களமிறங்கும் நியூசிலாந்து.!
மழையின் காரணமாக தடைபட்டு நடந்து வரும் இந்தியா Vs நியூசிலாந்து போட்டியின் இன்றைய ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டுக்கு சென்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அங்குள்ள வானிலை காரணமாக போட்டிகள் திடீரென தள்ளியும் வைக்கப்பட்டது. இன்று, மூன்றாம் ஒருநாள் போட்டித்தொடரில் இன்று ஆடியது. பேட்டிங்கில் இறங்கிய இந்திய அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஸ்ரேயாஸ் 49 ரங்களும், வாஷிங்க்டன் சுந்தர் 51 ரன்களும் எடுத்திருந்தனர். பிற போட்டியாளர்கள் ஆட்டத்தின் போது சொதப்பலில் ஈடுபட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட கில் 13 ரன்களும், பண்ட் 10 ரன்களும், சூரிய குமார் 6 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் மில்னே மற்றும் மிட்சல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தனர். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய தயாராக உள்ளது. இந்திய அணியின் சொதப்பல் ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.