#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் டெஸ்ட்: ஜடேஜா அபாரம்! இந்திய அணி ஆல் அவுட்
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்று களமிறங்கி இரண்டாவது ஓவரிலேயே மேற்கொண்டு 4 ரன்கள் எடுத்து 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து இஷாந்த் ஷர்மா 19, சமி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக ஆடிய இரு ஜடேஜா அரைசதத்தை கடந்தார். 58 ரன்கள் எடுத்த ஜடேஜா 97 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் ரஹானே எடுத்த 81 ரன்கள் தான் அதிகப்பட்சம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் 4, கேப்ரியல் 3, சேஷ் 2, ஹோல்டர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.