மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டி-20 தொடர்; மீண்டும் டாஸில் தோற்ற இந்தியா: ஆஸ்திரேலிய அணி பந்துவீச தீர்மானம்..!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் குறுகிய கால தொடராகும், இன்று தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் 25 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-
இந்தியா: - ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் பட்டேல், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா:- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், டிம் டேவிட், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஸ் ஹேசில்வுட்