மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
BCCI அப்டேட்: இலங்கைக்கு எதிரான ஒயிட் பால் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
வரும் ஜனவரி மாதத்தில் இலங்கை கிரிக்கெட் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாட உள்ள முதல் தொடர் என்பதால் இந்தத் தொடரில் இடம்பெறப் போகும் வீரர்கள் பற்றிய ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் பிசிசிஐ இந்த தொடர்களுக்கான இந்திய வீரர்கள் பட்டியலினை இன்று வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள டி20 தொடரில் ரோகித் சர்மா, கேர்ல் ராகுல் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வழிக்கப்பட்டு ஹர்டிக் பாண்டியா தலைமையில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்ள உள்ளது. துணை கேப்டனாக சூர்யா குமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹாட்ரிக் பாண்டியா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
#TeamIndia squad for three-match ODI series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/XlilZYQWX2
— BCCI (@BCCI) December 27, 2022
இந்தத் தொடரில் சிக்கிர் தவானுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அதே சமயத்தில் காயத்திலிருந்து மீண்டுள்ள ரவீந்திர ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருடைய பெயரும் இடம் பெறவில்லை. மேலும் நட்சத்திர வேகபந்து வீச்சாளர் பும்ராவும் இந்தத் தொடரில் கலந்து கொள்ளவில்லை.