#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள இந்திய அணி வீரர்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்து வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் துவங்குகிறது.
India’s Test squad: Virat (Capt), Mayank, Prithvi Shaw, Shubman, Pujara, Ajinkya Rahane (vc), Hanuma Vihari, Wriddhiman Saha (wk), Rishabh Pant (wk), R. Ashwin, R. Jadeja, Jasprit Bumrah, Umesh Yadav, Mohd. Shami, Navdeep Saini, Ishant Sharma (subject to fitness clearance).
— BCCI (@BCCI) February 4, 2020
இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் காயமடைந்த சீனியர் வீரர் இஷாந்த் ஷர்மா முழு உடற்தகுதி பெற்றால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணி:
விராட் கோலி (கே), மாயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, விர்திமான் சஹா, ரிஷப் ப்ந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, நவ்தீப் சாய்னி, இஷாந்த் ஷர்மா.